ஜகமே தந்திரம் ட்ரெய்லர்!!-சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!" - Today News Updates

Post Top Ad

Tuesday, 1 June 2021

ஜகமே தந்திரம் ட்ரெய்லர்!!-சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!"

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே கடந்த மே 14-ஆம் தேதி கர்ணன் திரைப்படம் ஓ.டி.டி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது.


E2jDSKTUUAIN20B

இதனையடுத்து தனுஷ் மீண்டும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், மீண்டும் தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணி சேரும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும்அறிவித்தார்.


இதனிடையே தான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஜகமே தந்திரம். இத்திரைப்படத்தில் தனுஷூடன் இணைந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.


E2x3aN5VoAEOdZP

ஆனால் இத்திரைப்படம் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா சூழலால் தியேட்டர் கள் திறக்காத நிலையில், ஓ.டி.ட தளமான நெட்பிளிக்ஸில் ஜூன் 18 ஆம் தேதி நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

E2x3ZN-VcAItWNd

இந்நிலையில் Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.



இப்படத்தின் ட்ரைலரில் தனுஷ் பேசிய "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா!" வசனத்தில் முடிகிறது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தில் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad