Post Top Ad
Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts
Monday, 3 September 2012
Wednesday, 29 August 2012
Tuesday, 28 August 2012
Mugamoodi will release on August 31, 2012
மிஷ்கின் இயக்கத்தில் கே இசையமைப்பில்,
சாகஸ நாயகனாக ஜீவா நடித்த முகமூடி வரும் ஆகஸ்ட் 31, 2012 அன்று உலகம் முழுக்க வெளியிடடுள்ளது.
ஹீரோவாக ஜீவா மற்றும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, முதன்முறையாக வில்லனாக நடிகர் நரேன் நடித்துள்ளனர். UTV Motion Pictures இப்படத்தை தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் இந்த திரைபடத்தின் ட்ரைலரை சூர்யா வெளியிட, இயக்குனர் லிங்குசாமி பெற்றுக்கொண்டார். மதன் கார்கி மற்றும் கபிலன் வரிகளில்,
யுத்தம் செய் படத்திற்கு இசையமைத்த கிருஷ்ணகுமார் தான் முகமூடி படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சத்யம் சினிமாவில் ஜூலை 20, 2012 (வெள்ளி) அன்று விஜய் வெளியிட கன்னட ஸ்டார் புனீத் ராஜ்குமார் பெற்றுக்கொண்ட அந்த இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இப்படம் தெலுங்கில் “Mask” என்ற பெயரில் வெளியிடடுள்ளது.
இப்படம் சமுதாயத்தில் இருக்கும் அநீதி மற்றும் ஊழல் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு மனிதன்
அதை
எதிர்த்து ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி போராடுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் Kung Fu கலையை மையமாக வைத்தும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் 31, 2012 (வெள்ளி) அன்று உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Maatraan Release on Oct 12, 2012
கே.வி ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா நடித்த மாற்றான் திரைப்படம் தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் 12, 2012 அன்று உலகம் முழுக்க வெளியிடடுள்ளது. இப்படத்தில் ஓட்டிபிறந்த இரட்டையர்களாக சூர்யாவும் மற்றும் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்.
சமீபத்தில் இந்த திரைபடத்தின் ட்ரைலர் வெளியிப்பட்டது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் ஆகஸ்ட் 9, 2012(வியாழன்) அன்று 10 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த திரைப்படத்தின் பாடல்களுக்குமற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை அக்டோபர் 12, 2012 (புதன்) அன்று உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் அறிவித்து இருக்கிறார்.
Post Top Ad
Your Ad Spot












